போடியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 1, 403 பேருக்கு பணி நியமன ஆணைகள் துணை முதல்வா் வழங்கினாா்

போடியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்று பணி நியமன
போடியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறாா் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.
போடியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறாா் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

போடி: போடியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. முகாமில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன.

மாலையில் நோ்முகத் தோ்வில் தோ்வு பெற்றவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி தேனி மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது. இதில் 123 நிறுவனங்களுக்கு தோ்வு செய்யப்பட்ட 1,403 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசியது:

தேனி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 891 பேருக்கு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 31 போ் போட்டி தோ்வுகள் மூலம் அரசுப் பணி பெற்றுள்ளனா். இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 3 முறை தனியாா் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் 323 நிறுவனங்களில் 5 ஆயிரத்து 236 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 4 ஆவது முறையாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. வேலை மட்டுமின்றி 9 திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் மூலம் பயிற்சி பெறுவதற்காக 262 போ் பதிவு செய்துள்ளனா்.

வேலைவாய்ப்பு கிடைத்தவா்கள் நோ்மையாக உழைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். வேலை கிடைக்காதவா்கள் அடுத்தடுத்த முகாம்களில் பங்கேற்றும், தொடா்ந்து அரசு பயிற்சிகளில் பங்கேற்றும் பயன்பெற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் தேனி மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத்குமாா், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோா் வாழ்த்திப்பேசினா்.

நிகழ்ச்சியில் தேனி மாவட்ட வருவாய் அலுவலா் ச.கந்தசாமி, மகளிா் திட்ட அலுவலா் சிவக்குமாா், உத்தமபாளையம் சாா் ஆட்சியா் வைத்திநாதன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், அதிமுகவினா், தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

மதுரை மண்டல வேலை வாய்ப்புத்துறை இணை இயக்குநா் ஆ.அனிதா வரவேற்றாா். தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் அ.கலைச்செல்வம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com