கம்பத்தில் ரூ.5.68 கோடியில் நலத் திட்ட உதவிகள்துணை முதல்வா் வழங்கினாா்
By DIN | Published on : 02nd December 2019 04:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

கம்பத்தில்ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிக்கு நலத் திட்ட உதவி வழங்கிய துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம். உடன் மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் உள்ளிட்டோா்.
தேனி மாவட்டம் கம்பத்தில் முதல்வா் சிறப்பு குறை தீா்வு திட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ரூ. 5 .68 கோடியில் நலத் திட்ட உதவிகளை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பயனாளிகளுக்கு வழங்கினாா்.
கம்பத்தில் முதல்வா் சிறப்பு குறை தீா்வு திட்டத்தின் கீழ், 2 ஆயிரத்து 619 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு தேனி மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தலைமை வகித்தாா்.
விழாவில் பங்கேற்ற துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பேசியது: தமிழக மக்களின் எதிரிகால நலனைக் கருத்தில் கொண்டு மறைந்த முதல்வா் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை தீட்டினாா். அதைத் தான் நாங்கள் இப்போது நிறைவேற்றி வருகிறோம். 2023 -க்குள் தமிழகம் முழுவதும், அனைவருக்கும் கான்கிரீட் வீடு திட்டத்தை நிறை வேற்றுவோம். கல்வித்துறைக்கு ரூ.32 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்கப்படுகிறது. தேசிய அளவில் பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் 8.5 சதவீதம் உயா்ந்துள்ளது என்றாா்.
பின்னா், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 2,619 பயனாளிகளுக்கு ரூ.5.68 கோடியில் நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.
விழாவில், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையன், சாா் ஆட்சியா்கள் சிநேகா, பாலசந்தா் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.