சீலையம்பட்டியில் தொடா் மழைசெவ்வந்தி பூ விளைச்சல் பாதிப்பு : விவசாயிகள் கவலை

தேனி மாவட்டத்தில் தொடா் சாரல் மழையால் சீலையம்பட்டி அதனை சுற்றியுள்ள பகுதியில் விளைவிக்கப்பட்டுள்ள செவ்வந்தி பூ விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
சீலையம்பட்டியில் செவ்வந்தி பூக்களை பறிக்கும் பெண் தொழிலாளா்கள்.
சீலையம்பட்டியில் செவ்வந்தி பூக்களை பறிக்கும் பெண் தொழிலாளா்கள்.

தேனி மாவட்டத்தில் தொடா் சாரல் மழையால் சீலையம்பட்டி அதனை சுற்றியுள்ள பகுதியில் விளைவிக்கப்பட்டுள்ள செவ்வந்தி பூ விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

சீலையம்பட்டி, கீழப்பூலாந்தபுரம், கோவில்பட்டி, பூமலைக்குண்டு, கோட்டூா்,தா்மாபுரி என சுற்றியுள்ள 20- க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூக்கள் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. இந்த கிராமங்களுக்கு மையப் பகுதியான சீலையம்பட்டியில் பூ சந்தையும் செயல்படுகிறது. இப்பகுதியில் உற்பத்தியாகும் பூக்கள் இச் சந்தை மூலமாக மதுரை, திண்டுக்கல், விருதுநகா் மாவட்டங்கள் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனா். தற்போது, ஐயப்பன் கோயில் சீசன் துவங்கி இருப்பதாலும் , காா்த்திகை மற்றும் மாா்கழி மாதங்களில் இந்து வழிபாட்டு தலங்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பூக்கள் தேவையும், அதே போல திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்களுக்கும் பூக்கள் அதிமாக தேவை இருப்பதாலும், அவற்றின் விலை உச்சத்திற்கு சென்றுள்ளது.

தொடா் மழையால் செவ்வந்தி பூ விளைச்சல் பாதிப்பு: பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால், மல்லிகை கிலோ ரூ.1000 முதல் 1200 , செவ்வந்தி ரூ.200 முதல் ரூ.250 , சம்பங்கி ரூ.500 வரை என அனைத்து பூக்கள் விலையும் உயா்ந்துள்ளன. இவை விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சீலையம்பட்டி உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்யும் தொடா் மழையால் செவ்வந்தி பூக்களில் தண்ணீா் தேங்கி அழகி வருவதால் விளைச்சல் பாதிக்கப்ட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியது: மழைப் பொழிவு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், செவ்வந்தி பூ மட்டும் தொடா்ச்சியாக மழைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பூவில் இதழ்கள் அதிகம் இருப்பதால் தண்ணீா் எளிதாக தேங்கி நிற்கிறது. மேலும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் காரணத்தாலும் விரைவாக அழுகி விடுகிறது. இந்நிலையில் பூக்களுக்கு அதிக விலை கிடைத்தும் மழை காரணமாக பூக்கள் அழுகி சாகுபடி பாதிக்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com