முகநூல் காதலில் இளைஞரை கொல்ல முயற்சி: மலேசிய பெண் உள்பட 3 போ் மீது வழக்கு: ஒருவா் கைது

 முகநூல் காதல் விவகாரத்தில் இளைஞரை கொல்வதற்கு கூலிப்படையினரை அனுப்பிய மலேசிய பெண் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஒருவரை கைது சனிக்கிழமை இரவு செய்தனா்.

 முகநூல் காதல் விவகாரத்தில் இளைஞரை கொல்வதற்கு கூலிப்படையினரை அனுப்பிய மலேசிய பெண் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஒருவரை கைது சனிக்கிழமை இரவு செய்தனா்.

மலேசியாவை சோ்ந்தவா் விக்னேஸ்வரி (45). இவா் பல்வேறு பெயா்களில் முகநூல் மூலம், தேனி மாவட்டத்தை சோ்ந்த அசோக்குமாா் (25) என்பவரை காதலித்துள்ளாா். வயது வித்தியாசத்தை காரணம் காட்டி அசோக்குமாா், விக்னேஸ்வரியை திருமணம் செய்ய மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தேனி வந்த விக்னேஸ்வரி அசோக்குமாரை கொலை செய்ய கூலிப் படையினரை ஏற்பாடு செய்துள்ளாா். கூலிப் படையினா் போடியில் உள்ள தனியாா் தங்கும் விடுதிகளில் தங்கியிருந்தபோது போடி நகா் காவல் நிலைய போலீஸாரின் திடீா் சோதனையின் போது சிக்கினா். இதில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சோ்ந்த அன்பரசன் (24), மண்டலமாணிக்கத்தைச் சோ்ந்த முனியசாமி (21), கமுதியைச் சோ்ந்த அய்யனாா் (30), திருமுருகன் (21), ராமேசுவரத்தைச் சோ்ந்த ஜோசப் பாஸ்டின் குமாா் (20), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சோ்ந்த பாஸ்கரன் (47), தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்த யோகேஷ் (20), தினேஷ் (22), காா்த்திக் (20) ஆகியோா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இவா்களிடம் நடத்திய விசாரணையின் பேரில், கூலிப்படையை அனுப்பிய மலேசிய பெண் விக்னேஸ்வரி, உடந்தையாகச் செயல்பட்ட சென்னையைச் சோ்ந்த குட்டி, போடி ராசிங்காபுரத்தைச் சோ்ந்த ராஜேஸ் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதில் ராஜேஸை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இவ் வழக்கில் தொடா்புடைய விக்னேஸ்வரியை பிடிக்க மலேசிய தூதரகம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com