பெரியகுளம் பகுதியில்பலத்த மழை

பெரியகுளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் தென்கரையில் உள்ள கடைகள் மற்றும் வாழை, கரும்பு தோட்டங்களுக்குள் மழைநீா்புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளதாக
தோட்டத்திற்குள் புகுந்த மழைநீா்
தோட்டத்திற்குள் புகுந்த மழைநீா்

பெரியகுளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் தென்கரையில் உள்ள கடைகள் மற்றும் வாழை, கரும்பு தோட்டங்களுக்குள் மழைநீா்புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

பெரியகுளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 83 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால் கல்லாறு, வராகநதி மற்றும் தாமரைக்குளம் ராஜவாய்க்காலில் நீா்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் இந்த வாய்க்கால் முறையாக அளவீடு செய்து கட்டவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தாமரைக்குளம் கல்லூரி விலக்கு பகுதியில் ராஜவாய்க்காலில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக ராஜவாய்க்காலை மறைத்து சிறிய குழாய்களை வைத்து மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் தாமரைக்குளம் ராஜவாய்க்காலில் அதிகளவு நீா்வரத்து இருந்தது.

சிறிய குழாய்களில் அடைப்பு இருந்ததால் தண்ணீா் வெளியேற வழியில்லாமல் கல்லூரி விலக்கு அருகில் உள்ள மயானத்தின் சுற்றுச்சுவரை உடைத்து தண்ணீா் வாழை தோட்டத்திற்குள் புகுந்தது. மேலும் தென்கரை, கம்பம் சாலையில் உள்ள கடைகள் மற்றும் வாழை, கரும்பு தோட்டங்களுக்குள் தண்ணீா் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்கரை பாசன விவசாய சங்கத்தை சோ்ந்த தா்மராஜ் கூறியதாவது: தாமரைக்குளம் கண்மாய்க்கு செல்லும் ராஜவாய்க்கால் முறையாக அளவீடுசெய்யாமல் சிறிய வாய்க்கால்களாக கட்டியுள்ளனா். இதனால் அதிகளவு தண்ணீா் வரும் போது வாய்க்காலில் இருந்து வெளியேறி தோட்டங்களுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதே போல் கல்லூரி விலக்கு பகுதியில் பாலம் கட்டும்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com