சின்னமனூரில் மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிப்பு

தேனி மாவட்டம் சின்னமனூரில் மாற்றுத்திறனாளிகள் தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
சின்னமனூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.
சின்னமனூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் மாற்றுத்திறனாளிகள் தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

ஜெயம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் பூபதி பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் போஸ் முன்னிலை வகித்தாா்.

இதில் அரசாங்கத்திடமிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான சலுகைகள் மற்றும் உரிமைகள் பெறப்பட்டு சரியான முறையில் பயன்படுத்துவது, உறுப்பினா்களுக்கு சுயதொழில் தொடங்கிட தேவையான பயிற்சி வகுப்புகள் நடத்துவது, மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சுமாா் 60-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com