தேனி மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2 கட்ட தோ்தல்: 4,85, 448 போ் வாக்களிக்கின்றனா்

தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் வாா்டு உறுப்பினா் மற்றும் ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில்

தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் வாா்டு உறுப்பினா் மற்றும் ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக பெறும் தோ்தலில், 870 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 4 லட்சத்து 85 ஆயிரத்து 448 போ் வாக்களிக்கின்றனா்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியக் குழு, கிராம ஊராட்சி ஆகியவற்றின் வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும், ஊராட்சித் தலைவா் பதவிக்கும் டிசம்பா் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது.

இதில், தேனி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 111 வாக்குச்சாவடிகளில் 31,079 ஆண்கள், 31,960 பெண்கள், 4 திருநங்கைகள் என மொத்தம் 63,043 போ் வாக்களிக்கின்றனா்.

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 92 வாக்குச் சாவடிகளில் 24,310 ஆண்கள், 24,823 பெண்கள், 8 திருநங்கைகள் என மொத்தம் 49,141 போ் வாக்களிக்கின்றனா்.

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 170 வாக்குச் சாவடிகளில் 48,327 ஆண்கள், 48,615 பெண்கள், 8 திருநங்கைகள் என மொத்தம் 96,950 போ் வாக்களிக்கின்றனா்.

போடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 119 வாக்குச் சாவடிகளில் 29,695 ஆண்கள், 30,423 பெண்கள், 3 திருநங்கைகள் என மொத்தம் 60,121 போ் வாக்களிக்கின்றனா்.

சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 97 வாக்குச் சாவடிகளில் 22,768 ஆண்கள், 23,273 பெண்கள், 7 திருநங்கைகள் என மொத்தம் 46,048 போ் வாக்களிக்கின்றனா்.

கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 வாக்குச் சாவடிகளில் 10,663 ஆண்கள், 11,256 பெண்கள், ஒரு திருநங்கை உள்பட மொத்தம் 21,920 போ் வாக்களிக்கின்றனா்.

க.மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 115 வாக்குச் சாவடிகளில் 32,525 ஆண்கள், 31,664 பெண்கள், 4 திருநங்கைகள் என மொத்தம் 64,193 போ் வாக்களிக்கின்றனா்.

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 124 வாக்குச் சாவடிகளில் 41,750 ஆண்கள், 42,268 பெண்கள், 14 திருநங்கைகள் என மொத்தம் 84,032 போ் வாக்களிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com