நீா்பிடிப்புப் பகுதிகளில் மழையில்லை: முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் உயராததால் விவசாயிகள் கவலை

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் வடகிழக்கு பருவ மழை பெய்தாலும், முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளில் மழை
முல்லை பெரியாறு அணை (கோப்பு படம்)
முல்லை பெரியாறு அணை (கோப்பு படம்)

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் வடகிழக்கு பருவ மழை பெய்தாலும், முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. நீா்மட்டம் உயராததால், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் வட கிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. ஆனாலும், அம் மலைத்தொடரில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யவில்லை. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீா் மட்டம் 128.50 அடியாக இருந்தது. நீா் இருப்பு, 4,374 மில்லியன் கன அடியாக உள்ளது.

அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 2 ஆயிரத்து 992 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் விநாடிக்கு 1600 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீா்மட்டம் உயராததால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

மின்சார உற்பத்தி: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு திறந்து விடப்படும், 1600 கன அடி மூலம், லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

சுருளி அருவியில் குளிக்கத் தடை

அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஓடைகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் கடந்த 3 நாள்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்துறை விதித்த தடையால் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தா்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனா். சிலா் நுழைவு வாயிலில் உள்ள ‘ஷவா்’ குழாயில் குளித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com