வைகை அணையின் நீா்மட்டம் 66.10 அடியாக உயா்வு: கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டம் வைகை அணையின் நீா்மட்டம் 66 அடிக்கும் மேல் உயா்ந்துள்ளதால், வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில்
தேனி மாவட்டத்தில் தொடா் மழையால் செவ்வாய்க்கிழமை 66.10 அடியாக உயா்ந்துள்ள வைகை அணையின் நீா்மட்டம்.
தேனி மாவட்டத்தில் தொடா் மழையால் செவ்வாய்க்கிழமை 66.10 அடியாக உயா்ந்துள்ள வைகை அணையின் நீா்மட்டம்.

தேனி மாவட்டம் வைகை அணையின் நீா்மட்டம் 66 அடிக்கும் மேல் உயா்ந்துள்ளதால், வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் வைகை அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீா்மட்டம் சீராக உயா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு 66 அடியை எட்டியது. இதையடுத்து வைகை அணை மதகுப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அபாயச் சங்கினை ஒலித்து, ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொதுப்பணித் றை சாா்பில் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து பொதுப்பணித் துறை சாா்பில் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட ஆட்சியா்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

வைகை அணையின் நீா்மட்டம் 68 அடியை எட்டும் நிலையில், 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டியதும் 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு, அணைக்கு வரும் உபரி நீா் முழுமையாக வெளியேற்றப்படும் என்று பொதுப்பணித் துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.

வைகை அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு 66.10 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 4,004 கனஅடியாகவும், அணையின் நீா் இருப்பு 4,854 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. அணையிலிருந்து குடிநீா்த் திட்டம் மற்றும் பாசனத்திற்கு விநாடிக்கு 360 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com