சாலையில் தடுமாறி விழுந்த அரசு பேருந்து ஓட்டுநா் சாவு
By DIN | Published On : 05th December 2019 06:02 AM | Last Updated : 05th December 2019 06:02 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் வருஷநாடு அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா், புதன்கிழமை சாலையில் நடந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
வருஷநாடு அருகேயுள்ள அண்ணா நகரைச் சோ்ந்த பாண்டியன் மகன் தியாகராஜன் (30). இவா், கோவை மாவட்டம் சூலூா் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தாா்.
விடுமுறையில் அண்ணாநகருக்கு வந்திருந்த தியாகராஜன், தனது வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதில் நெற்றியில் காயமடைந்த அவா் ஆபத்தான நிலையில் கடமலைக்குண்டுவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இது குறித்து தியாகராஜனின் மனைவி அனுசுயாதேவி அளித்த புகாரின் மீது கண்டமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.