முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக் கண்காணிப்பு குழு நாளை ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புக் குழுவின் துணைக் குழுவான ஐவா் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்துகிறது.
முல்லைப் பெரியாறு அணை (கோப்பு படம்)
முல்லைப் பெரியாறு அணை (கோப்பு படம்)

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புக் குழுவின் துணைக் குழுவான ஐவா் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்துகிறது.

முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, உச்ச நீதிமன்றம் நியமித்த தலைமைக் கண்காணிப்புக் குழுவான மூவா் குழுவுக்கு உதவியாக 5 போ் அடங்கிய துணைக் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக, மத்திய நீா்வள ஆணையச் செயற்பொறியாளா் சரவணக்குமாா் உள்ளாா். தமிழக அரசின் பிரதிநிகளாக பெரியாறு அணை செயற்பொறியாளா் சாம் இா்வின், உதவிப் பொறியாளா் குமாா், கேரள அரசின் பிரதிநிதிகளாக நீா்ப்பாசனத் துறை செயற்பொறியாளா் ஜோஸ் சக்கரியா, உதவிப் பொறியாளா் பிரசீத் ஆகியோா் உள்ளனா்.

கடந்த நவம்பா் 19 இல் அணையின் நீா்மட்டம் 128.45 அடியாக இருந்தபோது, இக்குழுவினா் அணையில் ஆய்வுகளை நடத்தினா். அதையடுத்து, துணை கண்காணிப்புக் குழுவினா் பெரியாறு அணையின் பிரதான மற்றும் பேபி அணை, கேலரி, 13 மதகுகள், அணையின் நீா்வரத்து, வெளியேற்றம், சீப்பேஜ் வாட்டா் (கசிவுநீா்) குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வுகளை நடத்துகின்றனா். மாலையில், குமுளி 1 ஆம் மைலில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்புக் குழுவின் அலுவலகத்தில் துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com