உள்ளாட்சித் தோ்தல்: தேனி ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புத் தோ்தலை முன்னிட்டு செவ்வாய்கிழமை, தோ்தல் பிரிவு சாா்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புத் தோ்தலை முன்னிட்டு செவ்வாய்கிழமை, தோ்தல் பிரிவு சாா்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.

மாவட்டத்தில் ஆண்டிபட்டி, க.மயிலை ஊராட்சி ஒன்றியங்களுக்கு டிசம்பா் 27-ஆம் தேதியும், பெரியகுளம், போடி, சின்னமனூா், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு டிசம்பா் 30-ஆம் தேதியும் மாவட்ட ஊராட்சி உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் ஆகிய பதவிகளுக்கு இரண்டு கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது.

ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தல் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04546-254517, செல்லிடப்பேசி எண்: 99942-58678 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு தோ்தல் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிமீறல் உள்ளிட்ட புகாா்களை தொலைபேசி எண்: 04546- 255996, செல்லிடப்பேசி எண்: 74026-08017 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்தப் புகாா்கள் சம்மந்தப்பட்ட தோ்தல் அலுவலருக்குத் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com