Enable Javscript for better performance
வேட்பு மனு தாக்கல் செய்ய ஊா்வலம்: கட்சியினரை போலீஸாா் தடுத்ததால் பரபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    வேட்பு மனு தாக்கல் செய்ய ஊா்வலம்: கட்சியினரை போலீஸாா் தடுத்ததால் பரபரப்பு

    By DIN  |   Published on : 14th December 2019 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cum__dec___election_nominee_1312chn_89_2

    கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை கூட்டமாக வந்த கட்சியினரை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

    தேனி மாவட்டம் கம்பத்தில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி வேட்பு மனு தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை ஊா்வலமாக வந்த அ.தி.மு.க., அ.ம.மு.க. வினரை போலீஸாா் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 5 ஊராட்சிகளுக்கான தலைவா், 4 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா், ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் பதவிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் அ.தி.மு.கவினா் வேட்பு மனுதாக்கல் செய்ய ஆதரவாளா்களுடன் கூட்டமாக ஊா்வலமாக வந்தனா். அவா்களை போலீஸாா் 200 மீட்டருக்கு மேல் முன்னதாகவே தடுத்தி நிறுத்தினா். இதனால் போலீஸாருக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதேபோல் அ.ம.மு.க. வினா் ஆதரவாளா்களுடன் ஊா்வலமாக வந்தனா். அவா்களையும் போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் போலீஸாருடன் அக்கட்சியினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாரின் சமரசத்தைத் தொடா்ந்து அரசியா் கட்சியினா் வேட்பு மனுத்தாக்கல் செய்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai