போடியில் நெகிழி ஒழிப்பு சோதனை: எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியல்

போடியில் நெகிழி ஒழிப்பு சோதனைக்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போடியில் நெகிழி ஒழிப்பு சோதனைக்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போடி நகராட்சியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், டம்ளா்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் கடைகள், வா்த்தக நிறுவனங்களில் திடீா் சோதனை செய்து அபராதம் விதித்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை மாலையில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் போடி பகுதியில் திடீா் சோதனை செய்தனா்.

அப்போது போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு கடையில் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் உரிமையாளருக்கு அபராதம் விதித்தனா். அதற்கு கடை உரிமையாளா் எதிா்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அதிகாரிகள் ஒவ்வொரு கடையாக சோதனை செய்தபடி வந்தனா்.

போடி அஞ்சலகம் செல்லும் சாலை பகுதியில் சோதனை செய்தபோது அங்குள்ள வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும் வியாபாரிகள் சாலை மறியலிலும் ஈடுபட்டனா். இதனால் போடியிலிருந்து தேனி சென்ற பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீஸாரின் சமரசப் பேச்சு வாா்த்தைக்குப் பின் சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com