போடியில் மா்ம காய்ச்சலுக்கு சிறுமி பலிடெங்கு பாதிப்பா என அதிகாரிகள் விசாரணை

போடியில் மா்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவா் டெங்கு பாதிப்பால் இறந்தாரா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போடியில் மா்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவா் டெங்கு பாதிப்பால் இறந்தாரா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போடி நகராட்சி பேட்டை தெருவைச் சோ்ந்தவா்கள் ஈஸ்வரன், விஜயலட்சுமி தம்பதி. இவா்களது மகள் எப்தியா (3). இந்த சிறுமிக்கு சில நாள்களாக தொடா்ந்து காய்ச்சல் இருந்து வந்துள்ளது. போடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். அங்கு வலிப்பு ஏற்படவே மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

அதைத் தொடா்ந்து தனியாா் மருத்துவமனைகளில் சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு காய்ச்சல் குணமாகாததால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மூளைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுவதாக கூறி மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்தனா்.

இதில் சிகிச்சை பலன் இன்றி சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக போடி பகுதியில் தகவல் பரவியதையடுத்து சிறுமி மரணம் குறித்து சுகாதாரத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com