அதிக வட்டி கேட்டு மிரட்டியதால் பெண் தற்கொலை முயற்சி: 4 பேர் தலைமறைவு

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியில் அதிக வட்டி கேட்டு மிரட்டியதால், பெண் விஷம்

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியில் அதிக வட்டி கேட்டு மிரட்டியதால், பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதை அடுத்து, போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து, 4 பேரை தேடி வருகின்றனர்.
நாராயணத்தேவன்பட்டி ரைஸ் மில் தெருவைச் சேர்ந்தவர் சின்னச்சாமி மனைவி செல்வி. இவர் வியாபாரம் செய்வதற்காக, தாமரைச்செல்வன் என்பவரிடம் ரூ. 2 லட்சம் மாத வட்டிக்கும், ரூ.50 ஆயிரம் வார வட்டிக்கும் என 5 ஆண்டுகளுக்கு முன் வாங்கியுள்ளார். மேலும், இதே ஊரைச் சேர்ந்த கலைநேசனிடம் ரூ. 20 ஆயிரம் வார வட்டிக்கும், சுருளிப்பட்டியைச் சேர்ந்த சந்திரன் என்பவரிடம் ரூ. 50 ஆயிரம் மாத வட்டிக்கும், நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்த ஆண்டவர் என்பவரிடம் ரூ. 5 ஆயிரம் வார வட்டிக்கும் வாங்கியவர், அதற்கான வட்டியை செலுத்தி  வந்துள்ளார். 
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக செல்விக்கு உடல் நலம் சரியில்லாததால், வியாபாரத்தை கவனிக்க முடியாமல், பணம் வாங்கியவர்களுக்கு வட்டி தர முடியவில்லையாம். இதனால், செல்விக்கு பணம் கொடுத்த 4 பேர்களும் ஆத்திரமடைந்து, ஞாயிற்றுக்கிழமை மாலையில் அவரது வீட்டுக்கு வந்து வட்டி கேட்டு ஆபாசமாகப் பேசியும், கொலை மிரட்டலும் விடுத்தனராம். இதனால் விரக்தியடைந்த செல்வி, விஷ மருந்தை தின்று மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதியினர், அவரை கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது, அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து செல்வியின் மகன் அசோக்குமார், ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், சார்பு-ஆய்வாளர் கே. ஜெய்கணேஷ் 4 பேர்கள்  மீதும்  வழக்கு பதிவு செய்து, அவர்களைத் தேடிவருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com