சுடச்சுட

  

  சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

  By DIN  |   Published on : 13th February 2019 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டம், கம்பம் அருகே செவ்வாய்க்கிழமை இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. 
  கருநாக்கமுத்தன்பட்டி உழவர் சங்கம் மற்றும் இரட்டை மாட்டு வண்டி சாரதிகள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற இப்பந்தயத்தில் தேன் சிட்டு, தட்டான் சிட்டு, புள்ளிமான் சிட்டு, முயல் சிட்டு ஆகிய மாட்டு வண்டி ஜோடிகள் கலந்து கொண்டன. 
  பரிசு பெற்றவர்களின் விவரம்: - 
  முயல்சிட்டு மாட்டு வண்டி பந்தயம்: முதலிடம் - அணைப்பட்டி சி.அஸ்வினா, இரண்டாமிடம் -  நாராயணத்தேவன்பட்டி நிஷாந்த் ஆர்மி , மூன்றாமிடம் - அணைப்பட்டி சிவபாண்டியன்.
   புள்ளிமான் சிட்டு: முதலிடம் - நாராயணத்தேவன்பட்டி பணக்காளை, இரண்டாமிடம் -  சுருளிப்பட்டி ரமேஷ், மூன்றாமிடம் - சுருளிப்பட்டி பாபு.
  தட்டான் சிட்டு: சுருளிப்பட்டி - சுந்தரம், சுருளிப்பட்டி - சிவனேசன் ஆர்மி, மூன்றாமிடம் - காமயகவுண்டன்பட்டி தமிழ் செல்வன்.
  தேன் சிட்டு: முதலிடம் -  ராமநாதபுரம் அஜ்மல்கான், இரண்டாமிடம் - கோம்பை ஆனந்தன், மூன்றாமிடம் - கம்பம்  ஆதிஷ்பாண்டியன்.
    போட்டிகளில் வெற்றி பெற்ற ரேக்ளா மாடுகளின் உரிமையாளர்களுக்கு தேனி மாவட்ட  ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மு.வீரராகவன் பரிசுகளை வழங்கினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai