அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தேனி மாவட்டம், கம்பம் ஆங்கூர் ராவுத்தர் நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடந்த கல்வியாண்டில்

தேனி மாவட்டம், கம்பம் ஆங்கூர் ராவுத்தர் நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
       இப்பள்ளியில், கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு  பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவிகளுக்குப் பாராட்டு  மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை எஸ். தவமணி தலைமை வகித்தார்.
    விழாவில், கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியின் நிறுவனச் செயலர் என். ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு, மாணவிகளை வாழ்த்திப் பேசினார். இதில், அதிக மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்ற  ஏ. நுப்யலா ரகுமத், சங்கீதா ஆகிய மாணவிகளுக்கு தலா ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் இடத்தை பிடித்த எஸ். சினேகா, பி. பிருந்தா, தவ்ஹீதா பர்வீன் ஆகியோருக்கு தலா ரூ. 2 ஆயிரமும், 3 ஆம் இடத்தைப் பிடித்த என். மீனா, ஜி. ஹேமலதா, நபீனா அலி ஆகியோருக்கு  தலா  ஆயிரம் ரூபாயும்  ஊக்கத் தொகையாக வழங்கினார். 
    முன்னதாக, முதுகலை ஆசிரியர் எஸ். கண்ணன் வரவேற்றார். ஆசிரியர் எஸ். இளங்கோவன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com