"நெகிழிப் பொருள்கள் ஒழிப்பில் தேனி மாவட்டம் முதன்மை'

நெகிழி பொருள்கள் ஒழிப்பில் முதன்மையாக திகழ்கிறது தேனி மாவட்டம் என மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.

நெகிழி பொருள்கள் ஒழிப்பில் முதன்மையாக திகழ்கிறது தேனி மாவட்டம் என மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.
கம்பம் ஊராட்சி ஒன்றியம் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற வட்ட அளவிலான மக்கள் தொடர்பு முகாமில் அவர் பேசியதாவது: தமிழகத்திலேயே நெகிழிப் பொருள்கள் ஒழிப்பில் தேனி மாவட்டம் முதன்மையாக திகழ்கிறது. மேலும் வரும் மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். 
வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரம் முகாமில் வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அதை இயக்கி பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றார்.
பின்னர் பயனாளிகளுக்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் விலையில்லா வீட்டுமனைப்பட்டா, 6 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து, 80 ஆயிரம் மதிப்புள்ள வீட்டுமனைப் பட்டாக்களையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், 9 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து,  8 ஆயிரம் மதிப்பிலான மாதாந்திர உதவித்தெகை பெறுவதற்கான ஆணைகளையும், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து, 20 ஆயிரத்து 442 மதிப்பிலான வேளாண் இடுபொருள்களையும், 24 பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சத்து, 8 ஆயிரத்து 442  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 9 பட்டா மாறுதல், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், 13 பயனாளிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
 இம்முகாமில், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.வைத்தியநாதன்,  கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பி.ராமர், தனித்துணை ஆட்சியர் து.தங்கவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் கார்த்தியாயினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எம்.சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இ.கே.ராமச்சந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் எம் .சீமைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com