பெரியகுளம், ஆண்டிபட்டி பகுதிகளில் பிப். 16இல் மின்தடை
By DIN | Published On : 14th February 2019 06:45 AM | Last Updated : 14th February 2019 06:45 AM | அ+அ அ- |

பெரியகுளம் , ஆண்டிபட்டி மற்றும் மதுராபுரி பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 16) மின்தடை ஏற்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெரியகுளம் மின்பகிர்மான செயற்பொறியாளர் ச.மாறன்மணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரியகுளம் கோட்ட பராமரிப்பிலுள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி மற்றும் மதுராபுரி பகுதிகளில் உள்ள உபமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (பிப். 16) மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தாமரைக்குளம், சோத்துப்பாறை பகுதிகளிலும், ஆண்டிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏத்தக்கோயில் பகுதிகளிலும், அதே போல் மதுராபுரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள லட்சுமிபுரம் பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.