சுடச்சுட

  

  வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்கு பிப்.23, 24ஆம் தேதி சிறப்பு முகாம்களில் மீண்டும் வாய்ப்பு

  By DIN  |   Published on : 19th February 2019 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், மக்களவைத் தேர்தில் வாக்குப் பதிவு செய்வதற்கு உதவும் வகையில் பிப்.23 மற்றும் 24ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
   இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளது:
        திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல், கடந்த ஜனவரி 31ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து விடுப்பட்ட வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 23.2.2019 மற்றும் 24.2.2019 ஆகிய 2 நாள்கள், சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் படிவங்கள் பெறப்படும். 
   18 வயது பூர்த்தி அடைந்த தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகள் உள்பட எந்த ஒரு நபரும் விடுபடாமல் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
   இதனை வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் பயன்படுத்திக் கொண்டு, 100 சதவீத வாக்குப் பதிவுக்கு ஒத்துழைக்க வேண்டும். வாக்குச் சாவடி மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க இயலாதவர்கள் 1950 (கட்டணமில்லாத தொலைபேசி) (0451-1950) தேர்தல் தகவல் தொடர்பு மையத்தில் தங்களது முகவரி மற்றும் தொலைபேசி எண்களை தெரிவித்தால் தங்களது இருப்பிடத்திற்கே சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் படிவங்கள் வழங்கி பூர்த்தி செய்து பெற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
  தேனி: தேனி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் 2019, ஜன.1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலில் பெயர்களை சரிபார்க்கவும், விடுபட்ட மற்றும் புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தப் பதிவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் பிப்.23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
  இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ளலாம். புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தப் பதிவுகளுக்கு உரிய படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் சேர்க்கை, முகவரி மாற்றம் மற்றும் திருத்தப் பதிவுகளுக்கு w‌w‌w.‌n‌v‌s‌p.‌i‌n என்ற இணைய தள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai