சபரிமலை விவகாரம்:  இந்து அமைப்பினர் போராட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைந்ததை கண்டித்து தேனியில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைந்ததை கண்டித்து தேனியில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட இந்து எழுச்சி முன்னணியினர் 28 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 தேனி நேரு சிலை அருகே நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ்  தலைமை வகித்தார்.
 இதில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதித்த கேரள அரசு மற்றும் காவல் துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். 
 இந்நிலையில், மறியலில் ஈடுபட்ட மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், செயலர் பாண்டி, பொருளாளர் செந்தில்குமார், தேனி ஒன்றியத் தலைவர் வெங்கலப்பாண்டி, நகர பொதுச் செயலர் செல்வப்பாண்டியன் உள்ளிட்ட 28 பேரை தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
பழனியில்:  பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே அகில பாரத இந்து மகா சபா சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் அழகுவேல் தலைமை வகித்தார். அமைப்பின் மாநில தலைவர் கல்கி ராஜசேகர், மாநில மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
 ஆர்ப்பாட்டத்தின் முடிவில் திடீரென கேரள முதல்வர் பினராயி விஜயனின் உருவப்படங்களை தீயிட்டு கொளுத்தினர். அதையடுத்துஅங்கிருந்த போலீஸார் உருவப்படங்களை கைப்பற்றி தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com