சுடச்சுட

  

  பொங்கல் பண்டிகை: சின்னமனூரில் கரும்பு அறுவடைப் பணிகள் தீவிரம்

  By DIN  |   Published on : 13th January 2019 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்டம் சின்னமனூரில் கரும்பு அறுவடைப் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
  தேனி மாவட்டம் சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பில் கரும்பு விவசாயம் நடைபெறுகிறது. நடப்பாண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சின்னமனூரில் விளைவிக்கப்பட்ட கரும்பை கொள்முதல் செய்ய வெளி மாவட்ட வியாபாரிகள் வருகை தொடங்கியுள்ளதால் அறுவடை பணிகளும் தீவிரமடைந்துள்ளன. கஜா' புயலால் டெல்டா மாவட்டங்களில் கரும்பு பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தேனி மாவட்டத்தில் நல்ல விளைச்சல் உள்ளது. இதனால் நடப்பாண்டில் வெளி மாவட்ட வியாபாரிகள் வருகை அதிகளவில் இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு வியாபாரிகள் வருகை இல்லாததால் கடந்த வாரம் முழுவதும் கரும்பு அறுவடை பணிகள் மந்தமாக காணப்பட்டன. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கியதையடுத்து சின்னமனூரில் கரும்பு அறுவடை பணிகள் சனிக்கிழமை தீவிரமடைந்தன.
  கரும்புகள் தேக்கம்: இது குறித்து விவசாயிகள் கூறியது: பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே 80 சதவீதம் கரும்புகள் விற்பனையாகி விடும். ஆனால் நடப்பாண்டில் சனிக்கிழமை முதலே வியாபாரிகள் வருகை காணப்பட்டதால் அன்றைய தினத்தில் 200 லோடுகள் வரையில் லாரிகளில் அனுப்பியுள்ளோம். கரும்பு மொத்த விலைக்கு 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.230 வரையில் விற்பனையாகிறது. ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் 1000 லோடு வரையில் கரும்பு கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai