நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லை:  குறைகிறது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்

முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் நீர்திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் நீர்திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது.
 சனிக்கிழமை 120 அடியாக இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 119.80 அடியாக குறைந்தது. அணையில் நீர் இருப்பு 2,592 கன அடியாக இருந்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு விநாடிக்கு 39 கன அடி தண்ணீரே வந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 467 கன அடி தண்ணீர் தமிழக பகுதிக்கு வெளியேற்றப்பட்டது.     பெரியாறு அணை, தேக்கடி ஏரி, கூடலூர், உத்தமபாளையம், வீரபாண்டி ஆகிய தேனி மாவட்ட பகுதிகளிலும் மழை இல்லை. இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியது:     வடகிழக்கு பருவ மழை குறையத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. 
மேலும் எதிர்பார்த்த மழை பெய்யாததால் அணையின் நீர் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் வெளியேற்றமும் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com