போடி பாலார்பட்டியில் பென்னிகுயிக் பொங்கல் விழா

போடி பாலார்பட்டியில் பென்னிகுயிக் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

போடி பாலார்பட்டியில் பென்னிகுயிக் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் இயக்குநர் லெனின் பாரதி பங்கேற்றார்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக முல்லைப் பெரியாறு அணையை ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் கட்டினார். அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான ஜனவரி 15 ஆம் தேதி பென்னிகுயிக் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தேனி மாவட்டம் பாலார்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பென்னிகுயிக் உருவப் படத்துடன் பெண்கள் ஊர்வலமாகச் சென்று பென்னிகுயிக் மண்டபம் முன் பொங்கல் வைத்தும், தங்கள் நிலங்களில் விளைந்து முதன் முதலில் அறுவடை செய்த பயிர்களை படைத்து வழிபாடு செய்தனர். இதில் திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
20 ஆவது ஆண்டாக பாலார்பட்டியில் நடைபெறும் பென்னிகுயிக் பொங்கல் விழாவில் தேவராட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை பென்னிகுயிக் பேரவைச் செயலாளர் ஆண்டி மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com