கடமலை - மயிலாடும்பாறையில் விவசாயிகளுக்கு நாளை சிறப்பு முகாம்
By DIN | Published On : 01st July 2019 02:06 AM | Last Updated : 01st July 2019 02:06 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை - மயிலாடும்பாறை ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் சிறு, குறு விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) நடைபெற உள்ளது.
இந்த முகாமில் சிறு, குறு விவசாயிகள் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனம் அமைப்பது குறித்து வேளாண்மை துறை சார்பில் விளக்கி கூறப்பட உள்ளது. சிறு, குறு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு சிறு, குறு விவசாயிகள் சான்று பெற வருவாய் துறை அதிகாரிகளும் முகாமில் பங்கு பெற உள்ளனர்.
இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் ராஜா கூறியதாவது: விவசாயிகள் சான்று பெற முகாமிற்கு வரும் போது சிட்டா, நில வரைபடம், ஆதார் மற்றும் குடும்ப அட்டை நகல்கள், மார்பளவு புகைப்படத்துடன் வருமாறும், இந்த அரிய வாய்ப்பை இப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.