சுடச்சுட

  

  ஆண்டிபட்டி அருகே கொத்தனார் மர்மச் சாவு: உறவினர்கள் சாலை மறியல்

  By DIN  |   Published on : 02nd July 2019 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக, கண்மாயில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் கொத்தனார் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
  தேனி மேரி மாதா பள்ளி அருகே உள்ள தாமரைக்குளம் கண்மாய் தண்ணீரில் மூழ்கி கடந்த சனிக்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது. தகவலின்பேரில், போலீஸார் சடலத்தை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
  இது குறித்து தேனி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். அதில், இறந்தவர் சின்னமனூர் அருகே உள்ள விஸ்வன்குளம் பகுதியைச் சேர்ந்த கோட்டைக்கருப்பன் (40). இவர், கொத்தனராக வேலை செய்துவந்துள்ளார். 2 வாரங்களுக்கு முன் கோயம்புத்தூருக்கு வேலைக்குச் செல்வதாகக் கூறி விட்டுச் சென்றவர், அதன்பின்னர் எந்தத் தொடர்பும் இல்லையாம். 
  தற்போது, தேனி பகுதியில் சடலமாகக் மீட்கப்பட்டதை அறிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து கோட்டைக்கருப்பன் சடலத்தை வாங்க மறுத்து, அவர் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் மதுரை தேசிய நெடுஞ்சாலையில்  மறியலில் ஈடுபட்டனர்.
  இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து, அவர்கள் சாலை மறியலை கைவிட்டு, கோட்டைக்கருப்பன் சடலத்தை பெற்றுச் சென்றனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  தேனியில் காவல் நிலையம் முற்றுகை: தேனியில் கண்மாய் தண்ணீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படும்  கோட்டைக்கருப்பனின் இறப்பில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்த அவரது மனைவி கலையரசி மற்றும் குடும்பத்தினர், தேனி காவல் நிலையத்தை திங்கள்கிழமை மாலை முற்றுகையிட்டனர். கோட்டைக்கருப்புவை கடந்த ஜூன் 26-ஆம் தேதி சின்னமனூரைச் சேர்ந்த தீபாவளிராஜ் என்பவர் கட்டட வேலைக்காக திருப்பூருக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு கோட்டைக்கருப்பனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை ஜூன் 28-ஆம் தேதி சின்னமனூருக்கு திரும்ப அனுப்பி விட்டதாகவும் கூறப்படும் நிலையில், அவர் தேனியில் கண்மாய் நீரிழ் மூழ்கி இறந்திருப்பதில் சந்தேகம் உள்ளது என்று, கலையரசி மற்றும் கோட்டைக்கருப்பனின் உறவினர்கள் புகார் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai