"மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

'தேனி மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படிக்கும் மாற்றுத் திறனாளிகள் கல்வி

'தேனி மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படிக்கும் மாற்றுத் திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:  மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் ஆண்டொன்றுக்கு ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,000, 6 முதல் 8-ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கு ரூ.3,000,  9  முதல் பிளஸ் 2 வரை படிப்பவர்களுக்கு ரூ.4,000, இளங்கலை பட்டப் படிப்புக்கு ரூ.6,000, முதுகலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.7,000 கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 
கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள், தங்களது தேசிய அடையாள அட்டை, 9-ஆம் வகுப்புக்கு மேல் படிப்பவர்கள் முந்தைய கல்வி ஆண்டு தேர்வின் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றுடன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் தொடர்பு கொண்டு படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம். 
நேரில் வர இயலாத மாற்றுத் திறனாளிகள் சார்பில், அவர்களது பெற்றோர் உரிய சான்றிதழ்களுடன் வந்து படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com