குடிமராமத்து: தேனி மாவட்டத்தில் 30 கண்மாய்களை சீரமைக்க ரூ.10.63 கோடி ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் பொதுப் பணித்துறை மஞ்சாளாறு வடிநிலக் கோட்டத்தின்

தேனி மாவட்டத்தில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் பொதுப் பணித்துறை மஞ்சாளாறு வடிநிலக் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள  30 கண்மாய்கள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களை சீரமைக்க அரசு ரூ.10 கோடியே 62 லட்சத்து 80 ஆயிரம் ஒதுக்கீடு செய்துள்ளது.
 குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் சங்கங்கள், பாசன சபைகள், ஆயக்கட்டுதாரர் தொகுப்பு மூலம் பொதுப் பணித்துறை கண்காணிப்பில் பணிகள் நடைபெறும். திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் தொகை பாசன சங்கங்களிடமிருந்து பொருளாகவோ, உழைப்பாகவோ, பணப் பங்களிப்பாகவோ பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும். 
இந்தப் பணிகளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கூறினார்.
சீரமைக்கப்படும் நீர்நிலைகள் மற்றும் மதிப்பீடு: மேல்மங்கலம் வழங்கு வாய்க்கால்- ரூ.90 லட்சம், அல்லிநகரம் மந்தைக்குளம் கண்மாய்-ரூ.23 லட்சம், எரசக்கநாயக்கனூர் மஞ்சள் நதி கண்மாய்- ரூ. 35 லட்சம், ஓடைப்பட்டி தாதமுத்தன் கண்மாய்- ரூ.40 லட்சம், கோம்பை புதுக்குளம் கண்மாய்-ரூ.30 லட்சம், காமயகவுண்டன்பட்டி கேசவபுரம் கண்மாய்-ரூ.40 லட்சம், தே.மீனாட்சிபுரம் அழகர்நாயக்கர்குளம்-ரூ.20 லட்சம், தே.மீனாட்சிபுரம் அழகர்செட்டி குளம்-ரூ.34 லட்சம், மீனாட்சிபுரம் தாசன்செட்டிகுளம்-ரூ.17 லட்சம்,  மேலச்சொக்கநாதபுரம் சங்கரப்பநாயக்கன் குளம்-ரூ.41 லட்சம். 
பூதிப்புரம் ராஜபூபாலசமுத்திரம் கண்மாய்-ரூ.35 லட்சம், சிலமலை அம்மாகுளம்-ரூ.21 லட்சம், சில்லமரத்துப்பட்டி கவுண்டர்குளம் கண்மாய்-ரூ.19 லட்சம், டொம்புச்சேரி சென்னையகவுண்டர்குளம் கண்மாய்- ரூ.46 லட்சம், டொம்புச்சேரி போசிகவுண்டர்குளம் கண்மாய்-ரூ.14 லட்சம், டொம்புச்சேரி கண்மாய்- ரூ.22 லட்சம், டொம்புச்சேரி சோதரனை கண்மாய்-ரூ.10 லட்சம்,  கோடாங்கிபட்டி பெரியகுளம் கண்மாய்-ரூ.83 லட்சம், கோடங்கிபட்டி சிறுகுளம் கண்மாய்-ரூ.62 லட்சம்,  போடி புதுக்குளம் கண்மாய்-ரூ.41 லட்சம், போடி அம்மா குளம் கண்மாய்-ரூ.20 லட்சம்.
மொட்டனூத்து நல்லிடைச்சேரி கண்மாய்-ரூ.45 லட்சம், கோவில்பட்டி சக்கிலிச்சிகுளம் கண்மாய்-ரூ.79 லட்சம், மரிக்குண்டு கோடாங்கிநாயக்கர் குளம்-ரூ.44.90 லட்சம், குன்னூர் கருங்குளம் மற்றும் செங்குளம் கண்மாய்-ரூ.84.70 லட்சம், ஏத்தக்கோயில் கண்மாய்-ரூ.18.90 லட்சம், மயிலாடும்பாறை கெங்கன்குளம் கண்மாய்-ரூ.6.20 லட்சம், மயிலாடும்பாறை கடம்பன்குளம் கண்மாய்-ரூ.14.40 லட்சம், மயிலாடும்பாறை பெரியகுளம் கண்மாய்-ரூ.10 லட்சம், மயிலாடும்பாறை செங்குளம் கண்மாய்-ரூ.16.70 லட்சம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com