விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தேனி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் விவசாயிகள் ஊக்கத் தொகை பெறுவதற்கு ஜூலை

தேனி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் விவசாயிகள் ஊக்கத் தொகை பெறுவதற்கு ஜூலை 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகள் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் மற்றும் 2 ஹெக்டேருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் 4 மாதங்களுக்கு ஒரு முறை தலா ரூ.2,000 வீதம் ஓராண்டுக்கு ரூ.6,000 ஊக்கத் தொகை வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்படுகிறது. 
இத்திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் எண், குடும்ப அட்டை எண், வங்கிக் கணக்கு பாஸ் புத்தகம், நிலத்தின் சர்வே எண் ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் அல்லது வட்டாட்சியரிடம் ஜூலை 9-ம் தேதிக்குள் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.
ஊக்கத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதில் பிரச்னை உள்ள விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரை ஜூலை 9 ஆம் தேதிக்குள் நேரில் சந்தித்து மனு அளிக்கலாம் என்று அச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com