சுடச்சுட

  

  போடியில் திங்கள்கிழமை இரவு ஆனி திருமஞ்சன தினத்தை முன்னிட்டு சிவன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. 
   போடி வினோபாஜி காலனியில் உள்ள இக்கோயிலில் சிவலிங்கப் பெருமானுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் மழை வேண்டியும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டியும் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவலிங்க பெருமானுக்கு புலித்தோல் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் சேகர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai