சுடச்சுட

  

  காரில் தோட்டாக்கள், வெடிபொருள்கள் பறிமுதல்: 5 பேர் கைது

  By DIN  |   Published on : 10th July 2019 07:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் வெடிபொருள்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, 5 பேரை  கைது செய்தனர்.
   கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள டி.காமக்காபட்டி சோதனைச்சாவடியில் செவ்வாய்க்கிழமை காலை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஓட்டுநர் இருக்கை அருகே இருந்த பெட்டியில், எஸ்பிபிஎல் ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 20 தோட்டாக்கள், 2 பாக்கெட் கரு மருந்து, அரை கிலோ பால்ரஸ் குண்டுகள் இருந்தன. அவற்றை வயல்களுக்குள் வரும் விலங்குகளை விரட்ட அனுமதியின்றி எடுத்துச் செல்வது விசாரணையில் தெரியவந்தது. 
   இதனையடுத்து வெடிபொருள்கள் மற்றும் தோட்டாக்களை தேவதானப்பட்டி போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றை கொண்டு சென்ற, கொடைக்கானலை சேர்ந்த அமல்ராஜ் (43), ஆரோக்கியதாஸ் (30), வீரச்செல்வம் (24), காளிமுத்து (24) மற்றும் வினோத் (எ) மரியதாஸ் (29) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai