சுடச்சுட

  

  பெரியகுளம் கௌமாரியம்மன் கோயிலில்  ஆனிப் பெருவிழா தொடக்கம்

  By DIN  |   Published on : 10th July 2019 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரியகுளம் கௌமாரியம்மன் கோயிலில் ஆனிப் பெரு விழா திங்கள்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது.
         இவ்விழாவை முன்னிட்டு, கடந்த 2 ஆம் தேதி சாட்டுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து,  திங்கள்கிழமை காலை கௌமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.      பின்னர், காலை 10 மணிக்கு கோயில் எதிரே அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இந்துசமய அறநிலையத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  ஜூலை 9 முதல் ஜூலை 17 ஆம் தேதி வரை அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
        முக்கிய விழாவான ஜூலை 16 ஆம் தேதி மாவிளக்கு உற்சவமும், ஜூலை 17 ஆம் தேதி அக்கினிச் சட்டி திருவிழாவும் நடைபெறுகிறது. ஜூலை 23 ஆம் தேதி மறுபூஜை நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai