சுடச்சுட

  

  பெரியகுளத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் பாராட்டு

  By DIN  |   Published on : 13th July 2019 11:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரியகுளத்தில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தவர்களுக்கு போக்குவரத்து போலீஸார் வியாழக்கிழமை இனிப்புகளை வழங்கி பாராட்டினர்.
  இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டி வருபவர்களுக்கு போக்குவரத்து போலீஸார் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி பெரியகுளம் பகுதியில் வியாழக்கிழமை மூன்றாந்தல் வழியாக தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் ஞானபண்டித நேரு தலைமையிலான போலீஸார் இனிப்புகளை வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தனர். 
  மேலும் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai