சுடச்சுட

  

  கூடலூர் தெற்கு காவல் நிலையப் பகுதியில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி ஊருக்கு ஒதுக்கு புறமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்பிரிவு போலீஸார் உதவியுடன் சார்பு ஆய்வாளர் திவான்மைதீன் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றார். அப்போது காஞ்சிமரத்துறை பகுதியில் ஒருவர் போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரைப் பிடித்து விசாரித்த போது, அவர் வெண்டிமுத்தையா (35) என்பதும், டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதும் தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீஸார், அவர் சாக்குப் பையில் வைத்திருந்த 45 மது பாட்டில்களையும் கைப்பற்றினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai