சுடச்சுட

  

  ஆண்டிபட்டியில் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீஸார் அறிவுறுத்தல்

  By DIN  |   Published on : 14th July 2019 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஆண்டிபட்டி நகரில் செயல்படும் வணிக நிறுவனங்களில் அதிக வெளிச்சமுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்தினர். 
  தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் வணிகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசன், காவல் நிலைய ஆய்வாளர் சரவண தெய்வேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில், ஆண்டிபட்டி பகுதியை விபத்தில்லா பகுதியாக மாற்ற வேண்டும். இரு சக்கர வாகனங்களை ஓட்டும் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்.    
  நகரில் குற்றத் தடுப்பு நடவடிக்கைக்காக வணிக நிறுவனங்கள் தங்கள் கடைகளுக்கு முன்பு வெளிச்சமுள்ள கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என  அறிவுறுத்தப்பட்டது.
  பின்னர்,  ஆண்டிபட்டி புறவழிச்சாலை திட்டம், போக்குவரத்து நெரிசல், நடைபாதை பிரச்னை, ரயில்வே பாலம் கட்டுமானப் பணி உள்ளிட்ட நகரின் முக்கிய பிரச்னைகளை தீர்க்க வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கைகளை அந்தந்த துறைக்கு பரிந்துரை செய்து நிறைவேற்றப்படும் என்று போலீஸார் உறுதி அளித்தனர்.   
  இதில், காவல் சார்பு-ஆய்வாளர்கள் சுல்தான் பாஷா, கோதண்டராமன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai