சுடச்சுட

  

  ஊராட்சிகளில் குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு

  By DIN  |   Published on : 14th July 2019 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீர் விநியோகத்தை கண்காணிக்கவும், குடிநீர் பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
  இது குறித்து ஊராக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியது: ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை, குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுதல், சீரான குடிநீர் விநியோகம், சுத்திகரிப்பு ஆகியவற்றை கண்காணிக்க ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும்  கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. 
  கட்டுப்பாட்டு அறை தொலைபேசி மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் பதிவு செய்து, கள ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்னைகள் குறித்து நாளிதழ் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகும் செய்தி, ஒளிபரப்புகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04546-262729, ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 04546-242328, க.மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் 04554-227260, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 04546-231259, தேனி ஒன்றியத்தில் 04546-252430, போடி ஒன்றியத்தில் 04546-280218, சின்னமனூர் ஒன்றியத்தில் 04554-247376, உத்தமபாளையம் ஒன்றியத்தில் 04554-265238, கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்:04554-274273 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்னைகள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai