சுடச்சுட

  


    காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 15-ம் தேதி அரசு மதுக் கடை மற்றும் தனியார் மதுக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அகில இந்திய மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
  இது குறித்து அக் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் எஸ்.அரசுபாண்டி கூறியது: முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழாவை பள்ளி மாணவர்கள் கல்வித் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.  காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 15 ஆம் தேதி மாநிலம் முழுவதும் அரசு மதுக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி அகில இந்திய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai