சுடச்சுட

  


  தேனி மாவட்டம், கம்பம் அருகே நண்பரை கொலை செய்த வழக்கில் 2 இளைஞர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
  கம்பம் அருகே கருநாக்கமுத்தன் பட்டியில் மனோஜ்குமார் என்ற இளைஞர் 2018 ஆம் ஆண்டு மாயமானார். இது தொடர்பாக இவரது நண்பர்கள் அஜித்குமார்(24), பிரவீண்குமார்(23) ஆகியோரிடம் விசாரித்த போது, நண்பரை கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. இது தொடர்பாக கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் 2 பேரையும் கடந்த ஜூன் 10 இல் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 
  இவர்கள் மீது ஏற்கெனவே, கொலை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்ததால் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். 
  இதை ஏற்று, இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது,
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai