குடிமராமத்து பணிகளின் விபரத்தை பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்

தேனி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலை சீரமைப்பு பணிகளின் விபரம், அதன் முக்கியத்துவம் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் தெரிவிக்க


  தேனி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலை சீரமைப்பு பணிகளின் விபரம், அதன் முக்கியத்துவம் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கூறினார்.
இது குறித்து தேனி மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகளுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பில் அவர் கூறியது: மாவட்டத்தில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் 30 கண்மாய் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்கள் விவசாயிகளின் பங்களிப்புடன், ரூ.10.63 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. குடிமராமத்துப் பணிகள் நடைபெறும் பகுதியை தெளிவாக வரையறுத்து எல்லைக் கற்கள் நட வேண்டும். கட்டுமானப் பணிகளுக்கு அங்கீகாரம் பெற்ற எம்-சான்ட் மணலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்நிலை சீரமைப்பு பணிகள், அதன் முக்கியத்துவம் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். வடகிழக்கு பருமழை தொடங்கும் முன் குடிமராமத்துத் திட்டப் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்றார்.
இதில் பொதுப் பணித்துறை மஞ்சளாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர்கள் கார்த்திகேயன், தமிழ்ச்செவ்வன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com