கரைமாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி சிறப்பு பூஜை
By DIN | Published On : 21st July 2019 01:15 AM | Last Updated : 21st July 2019 01:15 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம் அருகே கரைமாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி சடையன்குளம் அருகே கரைமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த ஆண்டு ஒட்டன்சத்திரம் 108 சிவசக்தி ஆராதனைக்குழு மற்றும் காமாட்சியம்மன் ஆராதனைக்குழு சார்பில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமையன்று கரைமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.