பாப்பையம்பட்டி கண்மாய் தூர்வாரும் பணி தொடக்கம்

பெரியகுளம் அருகே பாப்பையன்பட்டி கண்மாயை பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாரும் பணியை

பெரியகுளம் அருகே பாப்பையன்பட்டி கண்மாயை பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
தூர்வாரும் பணியைத் தொடக்கி வைத்தபின் ஆட்சியர் தெரிவித்ததாவது:  குடிமராமத்து திட்டத்தின் கீழ் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட தென்கரை, பாப்பையன்பட்டி கண்மாய் 1,835 மீட்டர் நீளத்திற்கும் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட தேவாரம், பெரிய தேவி குளம் கண்மாய்  1200 மீட்டர் நீளத்திற்கும்,  போடி நாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கோடாங்கிபட்டி கிராமம், கணக்கன் குளம் கண்மாய் 1260 மீட்டர் நீளத்திற்கும் தூர்வாரப்படும்.  
மதகுகளை சரிசெய்வது, குளத்தின் கரையை உயர்த்தி, அகலப்படுத்துவது, பாதையை சரிசெய்து, 3.5 மீட்டர் அளவு பாதை அமைப்பது, வரத்து வாய்க்காலில் 4 கி.மீ. தூரத்தில் உள்ள முள்புதற்களை அதற்றி தூர் வாருவது, சீமைக்கருவேல மரம், செடிகளை அகற்றி, குளத்தில் மேடு, பள்ளங்கள் இல்லாமல் சீரமைப்பது, கரையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது ஆகிய பணிகள் செய்யப்பட உள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயப்பிரிதா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன், பெரியகுளம் வட்டாட்சியர் ரத்தினமாலா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.பி.எம்.சையதுகான், கைலாசநாதர் கோயில் பராமரிப்புக்குழு தலைவர் வி.ப.ஜெயப்பிரதீப் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com