Enable Javscript for better performance
ஆண்டிபட்டி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஆக.7 இல் 3 ஆம் கட்ட கலந்தாய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஆக.7 இல் 3 ஆம் கட்ட கலந்தாய்வு

    By DIN  |   Published on : 25th July 2019 06:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 3-ஆம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
    ஆண்டிபட்டி அருகே செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரி கடந்த ஆண்டு வரை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் அரசு கல்லூரியாக செயல்படும் என அரசு அறிவித்தது. இக்கல்லூரியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு இந்த கல்வியாண்டான 2019- 2020 ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு மே 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முதல் கட்ட கலந்தாய்வில் பி.ஏ. பொருளாதாரம், பி.எஸ்சி., கணிதம், பி.எஸ்சி., இயற்பியல், பி.காம். ,(சி.ஏ.), ஆகிய பிரிவுகளில் மொத்தம் 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
     இதனிடையே கடந்த ஆண்டு வரை முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை 340 ஆக இருந்து வந்தநிலையில் இந்த கல்வியாண்டு 200 ஆக குறைக்கப்பட்டதால் இப்பகுதியைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் மேல் கல்வி பயில முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். மேலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இக்கல்லூரியில் கூடுதலாக மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த அரசு உத்தரவிட்டதையடுத்து ஜூலை 10 ஆம் தேதி 2-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. 
    இதுகுறித்து கல்லூரி முழு கூடுதல் பொறுப்பு முதல்வர் எஸ்.வானதி கூறியதாவது: இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்பேரில் நடப்பு கல்வி ஆண்டிற்கான கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் முன்பு விண்ணப்பித்த மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் கலந்தாய்வில் தகுதியின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். எனவே இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் உரிய அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai