Enable Javscript for better performance
உத்தமபாளையம் அருகே போலி உரம் தயாரித்து விற்பனை: கேரளத்தைச் சேர்ந்த கும்பலை பிடித்து போலீஸார் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    உத்தமபாளையம் அருகே போலி உரம் தயாரித்து விற்பனை: கேரளத்தைச் சேர்ந்த கும்பலை பிடித்து போலீஸார் விசாரணை

    By DIN  |   Published on : 25th July 2019 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தமபாளையம் அருகே போலி உரம் தயாரித்து வந்த கேரளாவைச் சேர்ந்த கும்பலை பிடித்த  போலீஸார் விசாரணை  செய்வதோடு, வேளாண்துறை மூலமாக அந்த இடத்திற்கு புதன்கிழமை சீல் வைத்தனர்.
    கோம்பையில் உத்தமபாளையம் சாலையிலுள்ள காலனி குடியிருப்பு அருகே வெளி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர்  அவ்வப்போது வந்து செல்வதாக கோம்பை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து அங்கு சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்தவர்கள் இயற்கை உரம் தயாரிப்பதாக தெரிவித்தனர்.  
    சந்தேகத்தின் பேரில் உரம் தயாரிப்பதற்கான அனுமதி சான்றிதழை ஆய்வு செய்த போது அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அதே போல இயற்கை உரம் தயாரிப்பதற்கான பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் என எதுவும் அங்கு இல்லை.
     தொடர் விசாரணையில் பல வகையான ரசாயன மருந்துகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அது சம்பந்தமாக கேட்டபோது முன்னுக்கு பின்முரணமாக  பதில் கூறியுள்ளனர்.
    போலி உரம் தயாரித்த இடத்துக்கு சீல்: உத்தமபாளையம் வேளாண்துறை அதிகாரிகள் மூலமாக அந்த இடத்திலிருந்த ரசாயன மருந்துகளை ஆய்வு செய்த போது இவற்றின் மூலமாக போலியான உரம் தயாரிக்கப் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து கோம்பை போலீஸார் உதவியுடன் போலி உரம் தயாரித்த தனியார் கட்டடத்திற்கு சீல் வைத்து பூட்டினர்.
     இது குறித்து போலீஸார்  மேற்கொண்ட விசாரணையில், முன்னணி உரம் தயாரிக்கும் நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி போலியான உர மூட்டைகளை தமிழகம் மற்றும் கேரளத்திற்கு அதிகளவில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து இந்த போலி உரம் தயாரிக்கும் இடம் எத்தனைஆண்டுகளாக இயங்கி வருகிறது என போலி உரநிறுவனத்தின் உரிமையாளர் கேரளத்தை சேர்ந்த அனீஸ் மற்றும் சிலரிடம்  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai