Enable Javscript for better performance
கம்பத்தில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கம்பத்தில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது

    By DIN  |   Published on : 25th July 2019 06:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கம்பத்தில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    கம்பம் மாலையம்மாள்புரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் ஏசு என்ற குமார் மகன் சக்தி நாகராஜ்  (23). இவர், கடந்த மூன்று மாதங்களாக  அந்த மாணவியை காதலிப்பதாக கூறி பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்துள்ளார். 
    பின்னர் செல்லிடப்பேசியில் படம் எடுத்து மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். ஜூலை 14 ஆம் தேதி மாணவியை மிரட்டி வீட்டிற்கு வரவழைத்து உணவு வாங்கி கொடுத்துள்ளார். 
    அதை சாப்பிட்டதும் மாணவி மயங்கவே அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 
    இதனால் அச்சமடைந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து  மாணவியின் தந்தை கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் ரா.பொன்னிவளவன், இளைஞர் சக்திநாகராஜ், தந்தை குமார், தாயார் செல்வி ஆகிய மூன்று பேர்களை புதன்கிழமை கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai