Enable Javscript for better performance
கம்பம் பள்ளத்தாக்கில் நெல் பயிருக்கு மாற்றாக கரும்பு விவசாயம்- Dinamani

சுடச்சுட

    

    கம்பம் பள்ளத்தாக்கில் நெல் பயிருக்கு மாற்றாக கரும்பு விவசாயம்

    By DIN  |   Published on : 25th July 2019 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தமபாளையம், சின்னமனூர் பகுதியில்  தென்மேற்கு பருவமழை கை கொடுக்காத நிலையில் நெல்பயிருக்கு மாற்றாக கரும்பு விவசாயம்  செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு பாசன நீர் மூலமாக 14,707 ஏக்கர் பரப்பளவிற்கு இரு போக நெல்பயிர் விவசாயம் நடைபெறும். இதற்கு ஜூன் முதல் வாரத்தில்  தொடங்கும் தென்மேற்கு பருவமழை மூலமாக  முதல் போக நெல் பயிர் சாகுபடி செய்யப்படும்.  இந்தாண்டு விவசாயிகள் எதிர்பார்த்த படி பருவமழை  கைகொடுக்க வில்லை. இதனால் கம்பம் பள்ளத்தாக்கில் உத்தமபாளைம்,சின்னமனூர்,அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, குச்சனூர் பகுதிகள் என 90 சதவீதமான நெல்பயிர் விளைநிலங்கள் தரிசு நிலங்களாக  காட்சியளிக்கிறது.
    இதனை அடுத்து, வாழ்வாதாரத்துக்கு விவசாயத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் வங்கிகளில் கடன் வாங்கி ஆழ்துளை கிணறு அமைத்து நெல்பயிருக்கு மாற்றாக ஆலைக் கரும்பு விவசாயத்தை மேற் கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai