Enable Javscript for better performance
கம்பம் வனத்துறை அலுவலகத்தில் சந்தன மரம் வெட்டி கடத்திய இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கம்பம் வனத்துறை அலுவலகத்தில் சந்தன மரம் வெட்டி கடத்திய இளைஞர் கைது

    By DIN  |   Published on : 25th July 2019 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலகத்தில் சந்தன மரத்தை வெட்டிய இளைஞரை கம்பம் தெற்கு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    கம்பம் வனத்துறை அலுவலகத்தில் ஜூலை 18 ஆம் தேதி சந்தன மரத்தை மர்மநபர்கள் வெட்டிச் சென்றனர். இதுபற்றி செவ்வாய்க்கிழமை வனக்காப்பாளர் வி. பெத்தனசாமி கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
    சார்பு ஆய்வாளர் முத்துசெல்வன் தலைமையில் போலீஸார் கம்பம் நெல்லுகுத்தி புளியமரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நடந்து வந்த நபரை பிடித்து போலீஸார் செய்த விசாரணையில், கூடலூர் கள்ளர் வடக்கு புதுத்தெருவைச்சேர்ந்த பாண்டியன் (32) என்பது தெரிய வந்தது. 
    மேலும் கம்பம் வனத்துறை அலுவலகத்தில் உள்ள 6 மீட்டர் சந்தன மரத்தை வெட்டி  அதில் இருந்து 3 அடி பாகத்தையும் திருடியதை ஒப்புக் கொண்டதால் அவரை போலீஸார் கைது 
    செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai