Enable Javscript for better performance
சின்னமனூர் அருகே அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சம் கல்விச் சீர்- Dinamani

சுடச்சுட

    

    சின்னமனூர் அருகே அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சம் கல்விச் சீர்

    By DIN  |   Published on : 25th July 2019 06:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சின்னமனுர் அருகே தனியார் அறக்கட்டளை மற்றும் சுழற் சங்கம் இணைந்து, அரசுப் பள்ளிக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான கல்விச் சீர் செவ்வாய்க்கிழமை வழங்கின.  
    புலிக்குத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான  இருக்கைகள், மேஜைகள் மற்றும் வகுப்பறைக்கு தேவையான ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள், மதுரை தர்மலிங்கம் அறக்கட்டளை மற்றும் தேனி சுழற்சங்கம் சங்கம் சார்பில் வழங்கப்பட்டன.
    செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கல்விச் சீர் வழங்கும் விழாவுக்கு, அறக்கட்டளைத் தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். சின்னமனூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஹெலன் மெட்டில்டா, சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியர் பீட்டர் வரவேற்றார்.
    இதில், அறக்கட்டளை நிர்வாகிகள், சுழற் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி 
    மாணவ, மாணவியர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai