Enable Javscript for better performance
தேனியில் அரசுப் பள்ளி பாதை ஆக்கிரமிப்பு: மாணவர்கள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    தேனியில் அரசுப் பள்ளி பாதை ஆக்கிரமிப்பு: மாணவர்கள் புகார்

    By DIN  |   Published on : 25th July 2019 07:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று வரும் வெங்கலாகோயில் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று புகார் தெரிவித்து புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் மனு அளித்தனர்.
    தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் தேனி வெங்கலாநகர், அப்துல்கலாம் நகர் மற்றும் அல்லிநகரத்தைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சக்திவேலிடம் அளித்த மனு விவரம்: தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று வருவதற்கு வெங்கலா கோயில் எதிர்புறம் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான பாதையை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம்.
    தற்போது இந்தப் பாதையை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்துக் கொண்டு எங்களை நடந்து செல்வதற்கு அனுமதிக்க மறுக்கின்றனர். 
    அல்லிநகரம், வெங்கலா நகர் மற்றும் அப்துல்கலாம் நகர் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் நலன் கருதி இப்பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றி, பொதுப் பயன்பாட்டிற்கு 
    விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai