Enable Javscript for better performance
போடியில் கூட்டுறவு வங்கி உறுப்பினர்களுக்கு நிதிசார் கல்வி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    போடியில் கூட்டுறவு வங்கி உறுப்பினர்களுக்கு நிதிசார் கல்வி முகாம்

    By DIN  |   Published on : 25th July 2019 06:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூட்டுறவு துறை சார்பில், கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு நிதிசார் கல்வி முகாம் போடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தேனி மண்டல கள மேலாளர் ஏ.ராஜ்குமார் தலைமை வகித்தார். முகாமில் நபார்டு வங்கி நிதிசார் கல்வி ஆலோசகர் வேலுச்சாமி  போடி கூட்டுறவு வங்கி ஆர்.விஸ்வன், சரக மேற்பார்வையாளர் ஏ.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.    கூட்டத்தில் வங்கி கணக்கு தொடங்குதல், பராமரித்தல், கடன் பெறுதல், பணமில்லா பரிவர்த்தனை, விபத்து காப்பீடு ஆகியவை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
    கூட்டத்தில் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள், கூட்டுறவு வங்கிகளின் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். கூட்டுறவு வங்கி செயலர் கூடலிங்கம் மற்றும் ஊழியர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai